விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா... அதுவும் ஒரு குழந்தையுடன்..!

 
1

நடிகை நயன்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர் என்றும் உயிர் மற்றும் உலகம் என்று அந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவ்வப்போது தனது இரண்டு குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் ஒரு குழந்தையுடன் மட்டும் செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அப்படி என்றால் இன்னொரு குழந்தை எங்கே? அந்த குழந்தையை முன்கூட்டியே விக்னேஷ் சிவன் எடுத்துச் சென்று விட்டாரா? என்பது போன்ற கேள்விகளை கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு மலையாள திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார் என்பதும் அது மட்டும் இன்றி நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web