ஹைதராபாத்தில் ரஜினியை சந்திக்க தனி ஆளாக மாஸாக வந்திறங்கிய நயன்தாரா..!

 
ஹைதராபாத்தில் ரஜினியை சந்திக்க தனி ஆளாக மாஸாக வந்திறங்கிய நயன்தாரா..!

ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நயன்தாரா ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் நேற்று முதல் பங்கேற்றுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை, கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு மத்தியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் உள்ளிட்ட படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் இரவும் பகலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா நேற்று தனி நபர் விமானம் மூலம் தனி ஆளாக ஹைதராபாத் வந்திறங்கினார்.

அப்போது விமான நிலையத்தில் அவர் மாஸாக நடைபோட்டு வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் பதிவான நிலையில் வைரலாகி வருகிறது. முன்பை காட்டிலும் மிகவும் ஸ்லிமாக இந்த படத்தில் காட்சி தருகிறார் நயன்தாரா. அண்ணாத்த படத்தில் நயன்தாரா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினிகாந்துடன் அவர் நடிக்கும் 5-வது படமாகும். 

From Around the web