மணிரத்னம் படத்தில் கமலுடன் ஜோடி சேரும் சூப்பர்ஸ்டார் நடிகை..!!

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு கதாநாயகி முடிவு செய்யப்பட்டுள்ள விபரம் வெளியாகியுள்ளது.
 
kamal haasan

விக்ரம் படத்தின் விஸ்வரூப வெற்றியை தொடர்ந்து, வரிசையாக படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் கமல்ஹாசன். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் துவங்கும் என கூறப்படுகிறது.

அதையடுத்து பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் படங்களை கமல்ஹாசன் ஒப்பந்தம் செய்துவைத்துள்ளார். இதற்கிடையில் கமல்ஹாசனின் 234-வது  படத்தை மணிரத்னம் இயக்குவார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது. அதனுடைய ஷூட்டிங் எப்போது துவங்கும் என்று தெரியவில்லை.

எனினும் இந்தியன் 2 பணிகள் முடிந்ததும் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நயன்தாரா கமலுடன் இணைந்து நடிக்கவில்லை. அதேபோல மணிரத்னம் இயக்கத்திலும் நடித்தது கிடையாது.

அதனால் இந்த கூட்டணி உறுதியாக இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக கடல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு மணிரத்னம் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் லக்ஷ்மி மஞ்சு நடித்தார். அதேபோல செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. 

கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில்குந்தவை மற்றும் நந்தினி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு  நயன்தாராவை படக்குழு அணுகியது. ஆனால் அவ்விரண்டு வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டார். இதற்கிடையில் கமல்ஹாசன் படத்தில் நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது. 
 

From Around the web