விரைவில் நடிப்புக்கு குட்பை சொல்லும் முடிவில் நயன்தாரா..!

 
நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா விரைவில் சினிமாவுக்கு முழுக்குப் போட இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு அவருடைய திருமணத்துக்கு பிறகு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா இயக்குநர் விக்னெஷ் சிவனை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார். தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்கள் முடிந்தவுடன் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிட அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முடிவை அவர் விக்னேஷ் சிவனுடன் கலந்தாலோசித்தது எடுத்துள்ளார். மேலும், நயன்தாரா தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அவருடைய குடும்பத்தாரும் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web