அண்ணாத்தாவுடன் முடித்துக்கொள்ளும் நயன்தாரா- இனி அவர் வழி... தனி வழி..!!

 
அண்ணாத்தாவுடன் முடித்துக்கொள்ளும் நயன்தாரா- இனி அவர் வழி... தனி வழி..!!

நடிகை நயன்தாரா ரஜினிகாந்துடன் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தை முடித்தவுடன் தன்னுடைய திரை வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல், பல இளம் தலைமுறை பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் நயன்தாரா. அதனாலேயே தனி ஒரு கதாநாயகியாக அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உருவானது. குறிப்பாக ஒவ்வொரு படத்துக்கும் அவருக்கான பெண் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தாலும், இடை இடையே பல்வேறு கமர்ஷியல் படங்களிலும் நயன்தாரா நடிப்பதுண்டு. அறம், கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களுக்கு இடையில், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் அவர் நடித்த படங்களும் வெளியாகின.

ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் கமர்ஷியல் படங்களில் மட்டுமே அதிகம் நடித்து வருகிறார். இதனால் ’நெற்றிக்கண்’ போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. இதனால் ரஜினியுடன் அவர் தற்போது நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தை முடித்த கையுடன் புதிய முடிவை எடுக்கவுள்ளாராம்.

அதன்படி இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பதாக நயன்தாரா முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

From Around the web