நாளை தனுஷுடன் மோதும் நயன்தாரா- களம் தயார்..!

 
நாளை தனுஷுடன் மோதும் நயன்தாரா- களம் தயார்..!

யாராடி நீ மோகினி, எதிர் நீச்சல் போன்ற படங்களில் இணைந்து நடித்த தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் நாளை களத்தில் எதிரெதிர் துருவங்களாக நின்று போட்டி போடவுள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது. இந்த படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால், வேறு எந்த முக்கியமான படங்களும் கர்ணன் படத்திற்கு எதிராக நாளை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் குஞ்சாகோ போபன் மற்றும் நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘நிழல்’ படம் நாளை வெளிவரவுள்ளது. த்ரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது தனுஷின் கர்ணன் படத்துக்கு எதிராக நிழல் படம் நாளை வெளிவரவுள்ளதால் சினிமா களம் தனுஷ் Vs நயன்தாரா என களம் மாறுபட்டுள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அடுத்ததாக லாக்டவுன் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதும் ரசிகர்களுக்கு இந்த இரண்டு படங்களுமே நல்ல ட்ரீட் இருக்கும் என்பதும் அவர்களுடைய கருத்தாக உள்ளது.

From Around the web