மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியீடு- நயன்தாரா பட நடிகை புகார்..!

 
நடிகை ரம்யா சுரேஷ்

மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நிழல்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஒருவர், வைரலாக பரவும் ஆபாச வீடியோ குறித்து சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

பல்வேறு மலையாளப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா சுரேஷ். இவருடைய பெயரில் ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து அறிந்த ரம்யா, தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் கேரளாவின் சைபர் கிரைம் காவல்துரையில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். அதில், அந்த வீடியோவில் இருப்பது தானில்லை. மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் வைரலாகி வருவது. இதை செய்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று தன்னுடைய புகாரில் நடிகை ரம்யா சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web