இந்த படத்திற்காக ஒரு மாதமாக நயன்தாரா விரதம்.. எந்த படத்திற்கு தெரியுமா ? 

 
1

ஆர் ஜே பாலாஜி நடித்து, இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி அடைந்ததும் அதில் இரண்டாவது பாகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இரண்டாவது பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தூக்கி எறிந்த பிறகு நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த திரைப்படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர். படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில் படத்திற்காக பூஜைக்கு பிரம்மாண்ட கோவில் செட்டப் போட்டு இருந்தது. இது பற்றி படத்தின் பூஜையில் ஐசரி கணேஷ் பேசுகையில் மூக்குத்தி அம்மன் என்பது தன்னுடைய குலதெய்வத்தின் பெயர் அந்த பெயரிலேயே படம் உருவானதால் அதன் முதல் பாகத்தை தயாரித்ததாகவும், அப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன போதிலும் அதன் பின் எந்த ஒரு சாமி படமும் வெளிவரவில்லை.

அதனால் நாமே நம்முடைய மூக்குத்தி அம்மன் படத்தை ஒரு பிரான்சைஸ் ஆக எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இரண்டாவது பாகத்தை தொடங்க முடிவெடுத்தேன். அதே நேரத்தில் பிரான்சைஸ் என்றாலே தமிழில் சுந்தர் சி தான் ஞாபகத்துக்கு வருவார். அவரின் அரண்மனை பிரான்சிஸ் எவ்வளவு வெற்றி பெற்றது என்பது அனைவருக்குமே தெரியும். அதேபோல் மூக்குத்தி அம்மன் படத்தையும் அவரை வைத்து எடுக்க ஆசைப்பட்டேன்.

அவரும் சுந்தர் சி யும் ஓகே என்று சொல்லிவிட்டார். படத்தின் பட்ஜெட் என்னவென்று கேட்டபோது அவர் மூன்று விரல்களை காட்டினார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். பிரம்மாண்ட அளவில் இப்படத்தை எடுக்க உள்ளோம். அதுபோல மூக்குத்தி அம்மன் படத்தின் பலமே நயன்தாரா தான். முதல் பாகம் எடுத்த போது படத்திற்காக விரதம் இருந்து நடித்துக் கொடுத்தார். அதேபோல இரண்டாவது பாகம் பூஜை போடும் ஒரு மாதத்திற்கு முன்னரே தன்னுடைய குழந்தைகளுடன் விரதத்தை தொடங்கி விட்டார் என்று பேசி இருக்கிறார்.

From Around the web