ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த நயன்தாரா..! கிபிட்க்கு கிபிட்-ம் ஆச்சு..! நிறுவனத்திற்கு ப்ரோமோஷன்-ம் ஆச்சு..!   

 

 
1

நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா இருவருமே போட்டி போட்டுக்கொண்டு திரையுலகில் வளர்ச்சி அடைந்தாலும் இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு தொடர்ந்து நீடித்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்…இந்த நட்பை மேலும் பலப்படுத்தியது என்றால் அது கடந்த நயன் – சமந்தா நடிப்பில் விக்கி இயக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் எனலாம்…அது அவர்களுக்கு ஒரு பெரிய இடத்தை கொடுத்தது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, தன்னுடைய தோழிக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது…சமந்தா இதனை இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்தும் இருந்தார்.

நயன்தாரா தற்போது திரைப்படம், குடும்பம், குழந்தைகள் என ஒரு பக்கம் படு பிசியாக இருந்தாலும்… மற்றொரு புறம் பிஸ்னஸிலும் தனித்துவமாக மாஸ் காட்டி வருகிறார் சமீபத்தில் தான்,9ஸ்கின் என்கிற நிறுவனம் ஒன்றையும், மலேசியாவில் லான்ச் செய்தார்.

தன்னுடைய 9ஸ்கின் நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களை தான் நயன்தாரா தற்போது தன்னுடைய நெருங்கிய தோழியான சமந்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்…அதனை போல பல நடிகைகளுக்கும் அனுப்பி இருப்பதாக தெரிகிறது…

1

From Around the web