முதலமைச்சரின் மகளாகும் நயன்தாரா..! ரசிகர்கள் குஷி 

 
1

பிருத்விராஜ் இயக்கத்தில்  மோக‌ன்லால் நடிப்பில்  வெளியான படம் லூசிபர்.  இந்த படம்  தான் நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும்.  விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியல் மற்றும் கேங்ஸ்டர் ஆகிய இரண்டையும் மையமாக வைத்து உருவாகிய இப்படம் வசூல் சாதனையை படைத்தது. இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரிய வரவேற்பு இருந்தது. தற்போது இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கு உரிமையை நடிகர் சிரஞ்சீவி வாங்கி வைத்திருக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்க போகிறார். 

இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சர் மகள் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதே கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் மலையாளத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது  

From Around the web