மாதவன், சித்தார்த்துடன், நயன்தாரா- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
 

மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா மூவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
 
nayanthara

தமிழில் வெளியான விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா போன்ற வரவேற்புப் பெற்ற படங்களை தயாரித்த நிறுவனம் ஒய் நாட் ஸ்டூடியோஸ். இந்நிறுவனம் அடுத்ததாக புதிய படம் தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.

அதன்படி அந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அறிமுக இயக்குநர் சஷிகாந்த் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.


இந்த படத்துக்கு ‘டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆக்‌ஷன் பேக்கிடு த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக இந்த படத்தின் மூலம் நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து நடிக்கிறார். முன்னதாக மாதவன் மற்றும் சித்தார்த் ஆயுத எழுத்து, ரங்கே தே பசந்தி ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் படக்குழு குறித்த விபரங்கள் வெளியாகும் என அந்நிறுவனம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
 

From Around the web