வாய்ப்பின்றி தவிக்கும் நயன்தாரா- எல்லாம் அவரால் தான்..!!
 

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான நயன்தாராவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் உள்ளது. இதற்கு காரணம் மற்றொரு முன்னணி நடிகை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
nayanthara

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாராவுக்கு, கடந்த சில மாதங்களாகவே நேரம் சரியில்லை போல. ஒருகாலத்தில் அவர் தொட்டது எல்லாம் பொன் ஆனது. பெரியளவில் ஹிட்டாகாத நடிகர்கள் கூட, அவருடன் நடித்த பிறகு பெரியளவில் முன்னேற்றத்தைக் கண்டனர்.

கடந்தாண்டு விக்னேஷ் சிவனை அவர் திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து 4 மாதத்தில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்கிற கட்டாயத்தால், அவர் திரைப்பட வாய்ப்புகள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது தான் இதனுடைய முழு பின்னணி தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. தர்பார், நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், ஒ2, காட்ஃபாதர், கோல்டு, கனெக்ட் என வரிசையாக அவர் தோல்வி படங்கள் தான் நடித்துள்ளார்.

குறிப்பாக, அவற்றில் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் தான் ஹீரோ. எனினும் படங்கள் பெரியளவில் ஓடவில்லை. இதற்கு நயன்தாரா தான் காரணம் என்று கோல்வுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இப்போதைக்கு அவர் கையில் ஜவான், இறைவன் மற்றும் பெயரிடப்பாத லாரன்ஸ் படம் என 3 படங்கள் மட்டுமே உள்ளன. 

இவை மூன்றுமே கடந்த 2022-ம் ஆண்டு அவர் கையெழுத்திட்ட படங்கள். நடப்பாண்டில் அவர் எந்த புதிய படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தொடரும் தோல்விகள் மற்றும் எந்தவிதத்திலும் சம்பளத்தை குறைக்காத மனபான்மை ஆகியவை தான் காரணமாகும்.

aishwarya rajesh

இந்நிலையில் நயன்தாராவின் பட வாய்ப்புகள் அனைத்தும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்றுவிடுகின்றனவாம். சமீபகாலமாக அவருடைய படங்கள் நல்லபடியான விமர்சனங்களை பெறுகின்றன மற்றும் ஓரளவுக்கு லாபமும் கிடைக்கிறது. இதனால் நயன்தாராவை விட்டுவிட்டு ஐஸ்வர்யா ராஜேஷிடம் வாய்ப்புகள் பறந்துவிடுகின்றன.

இது நயன்தாராவுக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் உள்ளார். மேலும் விக்னேஷ் சிவனுக்கும் வாய்ப்புகள் எதுவும் சரிவர அமையாமல் உள்ளது. அவர் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை பிடிக்காமல், அஜித் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார்.

நடப்பாண்டு நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் பிரச்னையாகவே துவங்கியுள்ளது. இப்போது சுதாரித்துக் கொண்டால் தான் நயன்தாராவால் தனது நிலையை சரி செய்துகொள்ள முடியும். அவர் பாலிவுட்டில் நடிப்பதால், எந்த மாற்றமும் நடந்துவிடாது என்பதை அவர் மனதில் கொள்ள வேண்டும் என நலம் விரும்பிகள் குறிப்பிடுகின்றனர்.

From Around the web