அடுத்தடுத்து வெளியாகும் நயன்தாரா படங்கள்- தலைவி ஆட்டம் ஆரம்பம்..!!
தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகையாக இருந்த நயன்தாரா, தொடர் தோல்விகளில் கொஞ்சம் பின்னடவை சந்தித்து வருகிறார். ஆனால் அவருடைய சக போட்டியாளராக இருக்கும் த்ரிஷாவுக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான். அவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனினும் அவர் விஜய், அஜித், தனுஷ், கமல்ஹாசன் போன்ற முதன்மையான ஹீரோ படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தொடர் தோல்விகள் என்றாலும், நயன்தாரா கிராஃபும் சிறப்பாகவே உள்ளது. அவருடைய லைன் அப்பில் ஜெயம் ரவியுடன் இறைவன், ஷாரூக்கானுடன் ஜவான், மாதவன் - சித்தார்த்துடன் தி டெஸ்ட் என அவரும் அதிக எதிர்பார்ப்பை கொண்ட படங்களைஇ தன்வசம் வைத்துள்ளார்.

அகமது இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் அவர் நடித்துள்ள ‘இறைவன்’ படம் ஆகஸ்டு 25-ம் தேதி வெளியாகிறது. கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த படத்தை தொடர்ந்து இந்தி மற்றும் தமிழில் தயாராகியுள்ள ‘ஜவான்’ படம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா முதன்மையான கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் தீபிகா படுகோன், ப்ரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 - cini express.jpg)