த்ரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து நயன்தாராவுக்கும் அதே பெயர்..!!
 

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாராவின் கதாபாத்திர பின்னணி குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
 
nayanthara

தமிழில் 2009-ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐ. அகமது. ஆனால் அந்த படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு ஜீவா, த்ரிஷா நடிப்பில் என்றென்றும் புன்னகை படத்தை அவர் இயக்கினார். இது பெரியளவில் வெற்றி பெற்றது. 

அதை தொடர்ந்து தான் தமிழ் சினிமாவில் பிஸியான இயக்குநராக மாறினார் ஐ. அகமது. 2016-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஹன்சிகா நடிப்பில் ‘மனிதன்’ படத்தை இயக்கினார். இது பெரியளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது.

jayam ravi

தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள ’இறைவன்’ படம் வரும் ஆகஸ்டு 25-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயம் ரவி, நயன்தாரா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த பின்னணித் தகவல்கள் தெரியவந்துள்ளன. 

என்றென்றும் புன்னகை படத்தில் நடித்த த்ரிஷாவின் பெயர் ப்ரியா, அதேபோன்று மனிதன் படத்தில் நடித்த ஹன்சிகாவின் பெயர் பெயர். அந்த செண்டிமெண்ட் காரணமாக இறைவன் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்துக்கு ப்ரியா என்று பெயர் சூட்டியுள்ளாராம் அகமது.

ஆனால் அவருடைய முதல் படமான ‘வாமனன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ப்ரியா ஆனந்த். அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு திவ்யா என்று பெயர் சூட்டப்பட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


 

From Around the web