ஃபோர்ப்ஸ் மாத இதழ் அட்டைப் பக்கத்தில் நயன்தாரா..!

 
ஃபோர்ப்ஸ் அட்டைப் படத்தில் நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா அக்டோபர் மாதத்துக்கான ஃபோர்ப்ஸ் மாத இதழ் அட்டைப் பக்கத்தில் இடம்பிடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் கால்பதித்த நயன்தாரா, தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகியில் நடித்ததன் மூலம் கவனமீர்த்தார்.

அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பரவலாக நடித்தார். எனினும் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்ற அவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியை பெற்றார்.

பெண்கள் முன்னேற்றம், சினிமாவில் பெண்கள் போன்ற பல்வேறு தளங்களுக்கு முன்னுதாரணமாக நயன்தாரா இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் இவருக்கு இருக்கும் ஆளுமையை புரிந்துகொண்ட வோக், தன்னுடைய அட்டைப் படத்தில் இவரை இடம்பெறச் செய்து கவுரவித்தது.

இந்நிலையில் ஃபோர்ப்ஸ் மாத இதழில் அக்டோபர் மாதத்துக்கான பதிப்பில் அவருடைய புகைப்படம் அட்டைப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அவரை தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

From Around the web