அட்லீ படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியான நயன்தாரா..! 

 
நயன்தாரா மற்றும் ஷாரூக்கான்

இந்தியில் அட்லீ இயக்கும் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிரபர்க்கப்படுகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி சினிமா நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. அதிலும் தமிழ் திரைத்துறையில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார் ரசிகர்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து முத்திரை பதித்துள்ள நயன்தாரா, அடுத்து இந்தி சினிமாவில் கால்பதிக்கவுள்ளார்.

ராஜா ராணி படத்தில் நடித்த போது இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாராவுக்கு இடையே நட்பு உருவானது. அதை தொடர்ந்து இருவரும் பிகில் படத்தில் இணைந்து பணியாற்றினர். நடிகை நயன்தாராவை அவர் தனக்கான அதிர்ஷ்ட கதாநாயகியாக எண்ணுகிறார் அட்லீ.

இதன் காரணமாக பாலிவுட்டில் தனது இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்திற்கு கதாநாயகியாக நயன்தாராவை பரிந்துரைத்தார் அட்லீ. இதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஷாரூக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வந்த வாய்ப்பை நிராகரித்தார் நயன்தாரா. அதனால் ஷாரூக்கான் கதாநாயகி விஷயத்தில் அட்லீ முடிவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை தழுவின. அதனால் ஹிட் கொடுத்து ஆக வேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்தால் தென்னிந்திய மார்க்கெட்டையும் பிடித்துவிடலாம் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web