விக்னேஷ் சிவனால் கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா..!!

திருமண நாளன்று கணவர் விக்னேஷ் சிவன் எதிர்பாராத விதமாக கொடுத்த சர்ப்பரைஸால் நடிகை நயன்தாரா கண்கலங்கி அழுத வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
 
nayanthara

நீண்ட நாட்களுக்காக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் தங்களுடைய முதல் திருமணநாளை இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கொண்டாடினர். அதற்காக தங்களுடைய பிளாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் சிறியளவில் பார்ட்டி கொடுத்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக  விக்னேஷ் சிவனின் நண்பர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே பார்டி ஹாலுக்கு வந்தார். இதை சற்றும் எதிர்பாராத நயன்தாரா ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் வாசித்தார்.

nayanthara

இதை கேட்டதும் நயன்தாரா கண்கலங்கி அருகில் இருந்த கணவர் விக்னேஷ் சிவன் தோள்களில் சாய்ந்தார். இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
 

From Around the web