சொந்த பட நிறுவனமே போதும்- டாட்டா காட்டும் நயன்தாரா..!

 
நயன்தாரா

சொந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் மட்டுமே இனி நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக அவர் பங்கேற்றார். அப்போது விக்னேஷ் சிவனுக்கும் தனக்கும் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக கூறினார். இதனால் விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்தியில் தயாராகி வரும் அட்லீ இயக்கும் ஷாரூக்கான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வெளி நிறுவன படங்களில் அவர் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும், வெப் சிரீஸுக்கு மட்டும் பெரிய நிறுவனங்களுடன் கைக்கோர்க்கலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web