11 பாடல்கள் கொண்ட பிரேமம் பட இயக்குநர் படத்தில் நடிக்கும் நயன்தாரா...!

 
பாட்டு படத்தில் நயன்தாரா

பிரேமம் படத்தை தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் புதிய படத்தில் ஃபகத் பாசில் ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில், கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், அவ்வப்போது மலையாள சினிமாவில் நடிப்பது நயன்தாராவின் வழக்கம். கடைசியாக குஞ்சாகோ கோபனுடன் ‘நிழல்’ படத்தில் நடித்திருந்தார். கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக வெளியானதால் இப்படம் பெரியளவில் ரசிகர்களிடம் கவனமீர்க்கவில்லை.

அதை தொடர்ந்து நிவின் பால் உடன் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். பிறகு, பிரேமம் படத்தை தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் படத்தில் அவர் கமிட் செய்யப்பட்டுள்ளார். ‘பாட்டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் இசைக்கு முக்கியத்துவம் கொண்டு உருவாக்கப்படுகிறது.

மேலும் படத்திற்கு அல்போன்ஸ் புத்ரனே இசையமைக்கவும் உள்ளார். இது அவர் இசையமைக்கும் முதல் படமாகும். மொத்தம் 11 பாடல்கள் கொண்ட பாட்டு படத்தில் ஹீரோவாக ஃபகத் பாசில் நடிக்கிறார். இந்த அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

படத்தின் கதாநாயகியை குறித்து சஸ்பென்ஸ் காத்துவந்த படக்குழு, தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. பாட்டு படத்தில் நயன்தாரா நடிப்பதை அடுத்து தமிழகத்திலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

From Around the web