நயன்தாரா திருமண வீடியோ! கோடிக்கணக்கில் Netflix கொடுத்த தொகை!
Nov 21, 2024, 08:35 IST
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை நயன்தாரா. இவங்களுக்கு இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது திருமண வீடியோ ஆவணப்படமாக "நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்" என்ற தலைப்பில் தயாராகி வெளியாகி நெட்பிலிக்ஹில் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த வீடியோ வெளியாவதற்கு முன்னர் நடிகை நயன்தாரா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அது நடிகர் தனுஷுக்கு எதிராக இருந்ததால் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது. அதற்கு இன்னும் தனுஷ் ஒரு பதிலும் அளிக்கவில்லை. நயன்தாராவின் 40ஆவது பிறந்தநாளான நவம்பர் 18ம் தேதி வெளியானது. இந்த ஆவணப்படத்தை நெட்பிலிக்ஸ் ரூ. 80 முதல் ரூ. 100 கோடி வரையிலான மதிப்பில் நெட்பிலிக்ஸ் வாங்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.