கவினுக்கு லிஃப்ட் கொடுத்த நயன்தாரா..!

 
கவின் மற்றும் நயன்தாரா

சின்னத்திரையில் இருந்து சினிமா ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ள கவின், அடுத்ததாக நயன்தாரா படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த கவின், சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அவருடைய நடிப்பில் புதியதாக உருவாகியுள்ள படம் ‘லிஃப்ட்’. சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் இப்படம் வெளியானது.

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. எனினும் கவின் நல்ல கவனம் பெற்றுள்ளார். அதன்மூலம் அவருக்கு அடுத்ததாக பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார். படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு கவுவரவ வேடத்தில் நடிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web