சிரஞ்சீவிக்கு தங்கை, முதலமைச்சருக்கு மகள்- கலக்கப்போகும் நயன்தாரா..!

 
சிரஞ்சீவிக்கு தங்கை, முதலமைச்சருக்கு மகள்- கலக்கப்போகும் நயன்தாரா..!

தெலுங்கில் வெளியான சைரா நரசிம்மஹ ரெட்டி படத்தில் சிரஞ்சீவிக்கு முதன்முதலாக ஜோடியாக நடித்த நயன்தாரா, அடுத்து அவருடன் இணையப்போகும் படத்தில் தங்கையாக நடிக்கும் விபரங்கள் தெரியவந்துள்ளன.

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் லூசிஃபர். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்யபப்ட்டு வெளியிடப்பட்டது.

ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படம் தற்போது தெலுங்கில் நேரடியாக ரீமேக் செய்யப்படுகிறது. மோகன் ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழு நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் அவர் கால்ஷீட் காரணமாக ஒதுங்கிவிட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தனது வேடத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என சிரஞ்சீவி அடிப்பிடித்து வருகிறாராம்.

அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதற்கு அவரும் ஒப்புக்கொண்டதாகவே சொல்லப்படுகிறது. லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கை, முதலமைச்சரின் மகள் என மிகவும் கணமான கதாபாத்திரமாம். அதனால் இந்த படத்தில் கதையின் நாயகனுக்கு அடுத்தப்படியான முக்கியமான வேடத்தில் நயன்தாரா நடிக்கப்போகிறார். 
 

From Around the web