பாகுபலி புதிய கதை பிடித்துவிட்டது- விரைவில் சிவகாமிதேவியாக களமிறங்கும் நயன்தாரா..!

 
நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகையாக இருக்கும் நயன்தாரா விரைவில் பிரமாண்டமாக தயாராகும் பாகுபலி தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. இதனுடைய இரண்டாவது பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் கவனத்தை ஈர்த்தது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்யராஜ், நாசர், ரோகிணி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாகுபலி கதைக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த கதையை வெப் தொடராக தயாரிக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த சிவாகாமியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக இது உருவாகவுள்ளது.

சிவகாமியின் இளம் காலத்தை உள்ளடக்கிய கதை என்பதால், ரம்யா கிருஷ்ணன் நடிக்க முடியாது. அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தன்னை வலை தொடர் நாயகியாக முத்திரை குத்தக்கூடும் என்கிற பயத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

இதனால் பாகுபலி வெப் தொடர் தயாரிப்புக்குழு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவரும் தொடரின் கதை பிடித்துவிட்டதாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் முடிவு சொல்லவில்லையாம்.

எனினும் பாகுபலி வெப் தொடர் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதுவும் பல சீசன்களாக தயாரிக்கும் முடிவில் பட்ககுழு உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இது வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

From Around the web