நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் ஓடிடி தளத்தில் வௌியானது..!!

 
1

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழில் மட்டும் தற்போது வெளியாகியுள்ள இப்படம் அடுத்து தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web