வரும் வெள்ளிக்கிழமை ஓடிடியில் ரிலீஸாகவிருக்கும் நயன்தாராவின் ‘அன்னப்பூரணி’..! 

 
1

 நயன்தாராவின் 75வது படமாக உருவாகி டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அன்னப்பூரணி. இந்தப் படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளிவந்த இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது. வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதைத்தொடர்ந்து படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன்படி வரும் 29ஆம் தேதி முதல் அன்னப்பூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்டீரிம் ஆகவுள்ளது. அத்துடன் படத்தை தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பார்க்கலாம்.


 


 

From Around the web