விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா எமோஷனல் டாக்..!

 
1

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022 ஆம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . ஏற்கனவே பிரபலமான இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு மேலும் பிரபலமாகிவிட்டனர் .

படு பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமண வீடியோ தான் இன்று வரை முழுசாக வெளியாகவில்லை.

இதையடுத்து அவரவர் படங்களில் பிஸியாக நடித்து வர சினிமாவை தாண்டி பல தொழில்களையும் இந்த ஜோடி செய்து வருகிறது அழகு சாதனா பொருட்கள் முதல் நாப்கின் வரை முழுக்க முழுக்க பெண்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தரமாக தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா அங்கு தனது காதல் கணவர் குறித்து சற்று எமோஷனலாக பேசியுள்ளார்.

சந்தோஷமாக உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும், கண்டிப்பாக ஒரு ஆண் இருக்கிறார். விக்னேஷ் சிவனை சந்தித்ததில் இருந்து இன்னும் மிகப்பெரிய விஷயங்களை செய்ய வேண்டும் என்றுதான் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். என்றுமே ‘ஏன் இதை செய்கிறீர்கள்’ என கேட்டதில்லை. என்னுடைய பெரிய பலம் அவர்தான்.

முன்பெல்லாம் சானிடரி நாப்கின் என வெளியில் சொல்வதற்கே தயங்கிட்டு இருந்தோம். ஆனா இப்போது தைரியமாக நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம் என கருதுகிறேன்.பல பெண்களுக்கு இன்னும் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வே இல்லை. அவர்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

From Around the web