நயன்தாரா அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! தினம் ஒரு ரகசியம் சொல்ல போகிறேன்..!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளாக நாயகி ஆக நடித்து வருகிறார் என்பதும், தற்போது கூட அவர் நான்கு படங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக வாய்ப்புகள் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நயன்தாரா ’ஐயா’ படத்தில் அறிமுகமானது போல் இப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும் நிலையில் அவர் தனது டயட் குறித்த சில விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகையாக இருப்பதால் உடலை சரியாக மெயின்டன் செய்ய வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாக நயன்தாரா கூறியுள்ளதோடு, சரியான உணவு மூலம் மகிழ்ச்சியான அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
எல்லோரையும் போல டயட் என்றால் மனதிற்கு பிடித்த உணவை சாப்பிடாமல், பரிந்துரை செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் தற்போது தனது உணவு ஆலோசகர் கூறிய அறிவுரையின் மூலம் மனதிற்கு பிடித்த உணவையும் சாப்பிட்டு டயட்டையும் மெயின்டைன் பண்ணலாம் என்பதை புரிந்து கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனதிற்கு பிடித்த உணவை வீட்டிலேயே செய்து தற்போது சாப்பிட்டு வருவதாகவும் தன்னுடைய இந்த உணவு அட்டவணையை தினமும் இனி ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் இந்த ரகசியத்தை நீங்களும் மெயின்டன் செய்தால் பிடித்த உணவுகளையும் சாப்பிடலாம், அதே நேரத்தில் டயட்டையும் கடைபிடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். எனவே நயன்தாராவின் இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் அவரது டயட் உணவு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.