நேரடியாக ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நயன்தாரா படம்..!

‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சஷிகாந்த். இவர் காதலில் சொதப்புவது எப்படி? தமிழ்ப்படம், காவியத் தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா உட்பட பல படங்களைத் தயாரித்தவர்
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இதில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா நடித்துள்ளார்.
நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தை நேரடியாக 2025ம் ஆண்டிற்கான நேரடி ஓடிடி படமாக வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தயாரித்த ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.