நயன்தாரா போட்ட லேட்டஸ்ட் அப்டேட்..!

 
1
நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்திருந்த ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா நடிப்பு மற்றும் பிசினஸ் இரண்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில், படப்பிடிப்பு தளத்தில் கேமராவுடன் படம் இயக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “புதிய தொடக்கத்தை நம்புங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் நயன்தாரா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web