லிப்லாக் காட்சிக்காக டெட்டால் ஊற்றி வாயை சுத்தம் செய்தேன்: லெஜண்டு நடிகை தகவல்..!!
இந்தியில் 1982-ம் ஆண்டு வெளியான சாத் சாத் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீனா குப்தா. அதை தொடர்ந்து பல்வேறு இந்திப் படங்களில் நடித்துள்ள அவர் வசுந்தரா, அஹம் போன்ற குறிப்பிடத்தக்க மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும், அவருக்கு மிகப்பெரிய பெயர் பெற்று தந்த திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியான பதாய் ஹோ. இந்த படம் தமிழில் வீட்ல விசேஷம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. ஊர்வசி நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் இவர் நடித்திருந்தார்.
தனது 20 வயதில் அமலன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நீனா, சீக்கரமாகவே அவரிடம் இருந்து விவகாரத்துப் பெற்றார். இதையடுத்து ஏற்கனவே திருமணமான வெஸ்ட் இண்டீஸ் நாட்டு கிரிக்கெட் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் உடன் காதல் உறவில் இருந்தார்.

அவர்கள் இருவருக்கும் மசாபா குப்தா என்கிற மகளும் உள்ளார். அவர் தற்போது பாலிவுட் சினிமாவின் நம்பன் ஒன் காஸ்டியூம் டிசைனராக உள்ளார். எனினும் வீரர் விவ்வை நீனா குப்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த 2008-ம் ஆண்டு விவேக் மெஹ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.
விரைவில் நீனா குப்தா நடித்துள்ள லஸ்டு ஸ்டோரீஸ் என்கிற ஆந்தாலஜி தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளிவரவுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் பிஸியாக உள்ளார். இதுதொடர்பாக அண்மையில் ஒரு நேர்காணலில் நீனா பங்கேற்றார். அவரிடம் முதல் லிப்லாக் அனுபவம் குறித்து கேட்கப்பட்டது.

ஒரு நடிகராக எல்லா விதமான நடிப்பையும் வெளிப்படுத்துவது கடமை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீரியலில் நடித்தேன். இந்திய டிவி வரலாற்றில் முதன்முதலாக லிப்லாக் முத்தக் காட்சியை கொண்ட தொடர் அதுதான். நடிகர் திலீப் தவான் மற்றும் எனக்கும் இடையில் அந்த முத்தக் காட்சி எடுக்கப்பட்டது.
அதற்கு முந்தைய இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. மனரீதியாக மிகவும் பலவீனமாக தான் அந்த காட்சியில் நடித்தேன். முத்தக் காட்சி முடிந்ததும் டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன். நடிப்புதான் என்றாலும், என்னால் என்னமோ அதுபோன்ற காட்சியில் நடிக்க முடியவில்லை என்று நீனா குப்தா தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)