யாரும் நம்ப வேண்டாம் - எனது பெயரில், பேஸ்புக்கில் போலி கணக்கு: நடிகை நேகா சக்ஸேனா..!

 
1

‘ஒரு மெல்லிய கோடு’, ‘வன்முறை’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நேகா சக்ஸேனா. இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர், தனது பெயரில், பேஸ்புக்கில் போலி கணக்குத் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலி கணக்குத் தொடங்கி என் நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஆபாசமான செய்திகளை அனுப்பி வருகிறார். போலி கணக்கில் இருந்து, ‘பிரெண்ட்ஸ் ரிக்வஸ்ட்’ வந்தால் ஏற்க வேண்டாம். அப்படி வந்தால் புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து என் டீம் விசாரித்து வருகிறது. விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web