மாட்டுக்கறியை சப்டைட்டிலில் மாற்றிய நெடஃப்ளிக்ஸ்- சாடும் நெட்டிசன்கள்..!

 
நம்ம ஸ்டோரீஸ் நீரஜ் மாதவ்

தென்னிந்திய மியூசிக் ஆல்பத்தின் ஒரு பாடலில் இடம்பெறும் ‘பீஃப்’ என்கிற வார்த்தைக்கு சப்டைட்டில் செய்யப்பட்டுள்ள மொழிபெயர்ப்பால் சர்ச்சையில் சிக்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமாக இயங்கும் நெட்ஃப்ளிக்ஸ், பல நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்ததில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு முக்கிய பங்குண்டு.

தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இசை கலைஞர்கள் இணைந்து ‘நம்ம ஸ்டோரீஸ்’ என்ற பெயரில் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கினர். அது சமீபத்தில்  நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இந்த ஆல்பத்தின் கடைசியில் மலையாள மொழியில் தயாரான ராப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதை நீரஜ் மாதவ் பாடியுள்ளது. அந்த பாடலில் நான் அதிகாலையில் பரோட்டா மற்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்" என்கிற வரியை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மாட்டிறைச்சி என்பதை ‘பீஃப்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதை நெட்ஃபிளிக்ஸ் தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் பீப் (Beef) என்பதற்கு பதிலாக பி.டி.எஃப் (BDF) எனப் பயன்படுத்தியுள்ளது. இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

அதனால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு எதிராக கேரள இளைஞர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். இணையதளங்களில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை சாடி பதிவிடும் அவர்கள், வடக்கு மாநிலங்களை கவனத்தில் கொண்டு மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
 

From Around the web