எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் - பிரேம்ஜி வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல்..! 

 
1

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் இரண்டாவது மகனும் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி, இந்து என்ற பெண்ணை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

45 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி, திருமணமே வேண்டாம் என்று கூறியதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவரது திருமணம் நடந்தது என்பது இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்தது.

திருமணத்திற்கு பின்னர் பிரேம்ஜி தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் பிரேம்ஜி திருமணத்திற்கு பின்னர் சமையல் அறையில் தனது மனைவிக்காக சமைக்கும் காட்சி உள்ளதை அடுத்து ’எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார்’ என்றும் ’கல்யாணம் ஆனாலே இப்படித்தான்’ என்றும்  கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. பிரேம்ஜியின் இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web