”இப்படியொரு வீடியோவ எதிர்பார்க்கல” பூஜா ஹெக்டேவை பாராட்டும் நெட்டிசன்கள்..!

 
”இப்படியொரு வீடியோவ எதிர்பார்க்கல” பூஜா ஹெக்டேவை பாராட்டும் நெட்டிசன்கள்..!

விஜய் நடித்து வரும் ‘தளபதி 65’ படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வு வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலதரப்பு மக்களை பாதித்துள்ள இந்த கொரோனா வைரஸுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது மேலும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை பூஜா ஹெக்டே 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு, பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் அவர்.

அதில் கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக பல்ஸ் ஆக்ஸி மீட்டர் இருக்கிறது. அதனுடைய பயன்பாடு குறித்து அந்த வீடியோவில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதனுடைய பயன்பாடு எப்படி என்பதை எளிய செயல்முறை மூலம் விளக்கியுள்ளார்.

சமூகநலன் கருதி தானாகவே முன்வந்து நடிகை பூஜா ஹெக்டே முன்னெடுத்துள்ள இந்த நல்லண்ண நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர். மேலும் அவருடைய வீடியோவை தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து, இதுதொடர்பாக அவர்களும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
 

From Around the web