கங்குவா ட்ரெய்லரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

 
1
கங்குவா திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் சூர்யா நடிப்பில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில், கங்குவா  படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இறுதியாக சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சூர்யாவின் கேரியரிலையே இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட் கொண்டு உருவாக்கப்படும் படமாக காணப்படுகின்றது. இதில்  சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கின்றார். வில்லனாக பாபி தியோல் நடிக்கின்றார்.

 

இன்றைய தினம் கங்குவா படத்தின் டிரைலர் சிவா பிறந்தநாளை  ஒட்டி வெளியானது. டிரைலரை பார்த்த சூர்யா ரசிகர்கள் செம பிரமாண்டமா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், இன்னொரு தரப்பினர் ட்ரைலர் நன்றாகவே இல்லை என கமெண்ட் பண்ணி வருவதோடு முக்கியமாக கங்குவா  டெய்லரை பார்க்கும்போது பாகுபலி வாடை தான் வருகின்றது கண்டிப்பாக அந்தப் படம் போல தான் இருக்கும் என பேசி வருகின்றார்கள். தற்போது கங்குவா  திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

From Around the web