வலிமை படத்தை தவறாக குறிப்பிட்ட ஜான்வி- வச்சு செய்த நெட்டிசன்கள்..!

 
வலிமை படக்குழு

நடிகர் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் பெயரை தவறாக குறிப்பிட்ட நடிகை ஜான்விக்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமா தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இரண்டாவதாக தமிழில் தயாரித்துள்ள படம் ‘வலிமை’. அஜித் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஹெச். வினோத் குமார் இயக்கி வருகிறார்.

இதனுடைய இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் சமூகவலைதளத்தில் வெளியான நிலையில், அதை போனி கபூரின் மகளான நடிகை ஜான்வி இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

அப்போது #வலிமை என்பதற்கு பதிலாக #வலமை என்று குறிப்பிட்டு படத்தை அவர் ப்ரோமோ செய்தார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து ஜான்விக்கு அஜித் ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகை ஜான்வியின் தாய் ஸ்ரீதேவி தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்தி நேர்காணலில் தன்னை பற்றி குறிப்பிடும் போது, தென்னிந்திய பெண் என்றே ஜான்வி குறிப்பிடுகிறார். இப்படி இருக்கும் போது வலிமை படத்தை தவறாக அவர் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web