சர்வைவர் நிகழ்ச்சியில் விக்ராந்தை ”வச்சு செய்யும்” நெட்டிசன்கள்..!

 
விக்ராந்த் சந்தோஷ்

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நடிகர் விக்ராந்த் சந்தோஷ் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தயாரித்து வரும் ரியாலிட்டி ஷோ தான் ‘சர்வைவர்’. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் துரித கதியில் நடந்து வந்ததை அடுத்து, கடந்த ஞாயிறு முதல் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஒரு தீவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 13 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அனைவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அவர்களில் ஒருவராக நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்தும் போட்டியிடுகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோட்டில் விக்ராந்த் போட்டியை பாதியிலே நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. அது தொடர்பாக தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “குறிப்பிட்ட டாஸ்க்கை செய்ய முடியாமல் போனது மனவேதனையாக உள்ளது. ஆனால் நான் இனி தளரமாட்டேன். என்னுடைய திறமை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வைவர் நிகழ்ச்சியின் கோட்பாடுகளின் படி போட்டியாளர்கள் யாரிடத்திலும் செல்போன் கிடையாது. அப்போது எப்படி விக்ராந்த் ட்விட்டரில் உடனுக்குடனான தகவல்களை பதிவிட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை அவருடைய மனைவி விக்ராந்தின் ட்விட்டரை கையாண்டு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web