நெட்ஃப்ளிக்ஸின் ஆங்கில தொடரில் ராஜலட்சுமி பாடிய பாடல்..!!
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மிண்டி காலிங் என்பவருடைய தயாரிப்பில் உருவான சிரீஸ் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணன், கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட பூர்ணா ஜெகன்நாதன், கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட செந்தில் ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாகத் துவங்கிய இந்த தொடர், ஐந்தாவது சீசனுடன் நிறைவு பெற்றது. நெவர் ஹேவ் ஐ எவர் சீசன் 5 கடந்த வாரம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தொடருக்கு, பல தரப்பு மக்களும் பாராட்டுதலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சிரீஸின் கடைசி எபிசோட்டில் கதாநாயகி மைத்ரேயி ராமகிருஷ்ணன், ‘புஷ்பா’ படத்தில் ராஜலட்சுமி செந்தில் பாடிய ‘ஏலே சாமி...’ பாட்டுக்கு நடனமாடியுள்ளார். மேலும் கடைசி எபிசோட்டில் வரக்கூடிய ஒரு கல்யாண காட்சிக்கு வேண்டி ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ”உன்னாலே எந்நாளும்...” பாடல் பயன்படுத்தப்பட்டது.
ஒரு சர்வதேசளவில் புகழ்பெற்ற சிரீஸில் தமிழ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தியாவைச் சேர்ந்த ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ சிரீஸ் மூலமாக, வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் சமுதாய மக்களுக்கு சர்வதேச அரங்கில் ஒரு புது வெளி கிடைத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.