விஜய் டிவி சீரியலில் எண்ட்ரியாகும் புது நடிகை..! புதிய திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

 
1

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதலாவது பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பந்த பாசத்தை கொண்டு மிகவும் எதார்த்தமான முறையில் நகர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டதோடு அதில் மருமகள்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைக்களம் நகர்த்தப்பட்டு வருகின்றது.

இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறி உள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சாதாரண குடும்பத்தில் நடக்கும் கதை களத்தை கொண்டு இந்த சீரியல் மிகவும் யதார்த்தமான முறையில் ஒளிபரப்பாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் புதிதாக நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தங்கமகள் சீரியலில் நடிக்கும் சாய் ரித்து என்பவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

தற்பொழுது இவர் புதிதாக இந்த சீரியலில் இணைந்துள்ளதோடு அவருக்கு கார் டிரைவராக கதிர் செல்கின்றார். எனவே இதன் கதைக்களம் இனி எவ்வாறு நகரப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரம் ராஜியின் முன்னாள் காதலனும் மீண்டும் இந்த சீரியலை என்ட்ரி கொடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

From Around the web