தெலுங்கு அந்தாதுன் ரீமேக் குறித்து வெளியான புதிய அறிவிப்பு..!

 
மேஸ்ட்ரோ பட போஸ்டர்

தெலுங்கில் உருவாகி வரும் அந்தாதுன் படத்தின் ரீமேக் படம் தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான படம் ‘அந்தாதுன்’. ஆயுஷ்மன குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆயுஷ்மான் குரானா பெற்றார்.

தற்போது இந்த படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் ரீமேக்கில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார்.

தெலுங்கில் உருவாகி வரும் அந்தாதுன் படத்திற்கு ‘மேஸ்ட்ரோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகனான நிதின் நடிக்கிறார், தபு நடித்த கதாபாத்திரத்தில் தமன்னாவும் ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.மெர்லபகா காந்தி இப்படத்தை இயக்குகிறார்

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் வரும் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. விரைவில் தமிழ் பதிப்பிற்கான வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web