இசைஞானி இளையராஜா பாடல்களை கேட்க புதிய ஆப் ..!!

 
1

இசைஞானி இளையராஜா பாடல்களை கேட்காதவர் இந்த உலகத்தில் யாருமே இல்லை என்றே கூறலாம்.இவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பட்டித்தொட்டு எல்லாம் இவரின் இசை இல்லாமல் இருக்காது. இப்படி புகழுக்கு சொந்தமான இளையராஜா இசை அமைத்த பாடல்கள் இல்லாமல் தமிழகம் மட்டுமில்லை உலகம் முழுவதும் தமிழக விழாக்கள் முழுமை பெறுவது இல்லை.  

இவரின் பாடல்களை பலரும் காலர் டியூன்களாகவும், ரிங் டோன்களாகவும் வைத்துள்ளனர். மேலும் சிலர் இளையராஜாவின் பழைய பாடல்களை புதுபீட்டில் மேம்படுத்தி அதை இணையத்தில் பதிவிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்.இந்த செயல்களுக்காக இசைஞானியிடம் அனுமதி வாங்குவது கிடையாது.

இதற்கு சரியான முறையில் முடிவு கட்ட நினைத்த இசைஞானி இளையராஜா, ஒரு புதிய செயலியை விரைவில் தொடங்கவுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் அவருடைய பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க முடியும். சில பாடல்களை அவரே நேரில் பாடி பதிவு செய்திருப்பதையும் பார்க்கலாம். இசைஞானி ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

From Around the web