‘லிகர்’ படத்தின் நியூ கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!! 

 
1

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், தமிழில் நடிகையர் திலகம், நோட்டா,டியர் காம்ரேட் படங்களில் நடித்துள்ளார்‌ விஜய் தேவரகொண்டா.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்து நடித்து வெளிவரவிருக்க இருக்கும் படம் ‘லிகர்’.இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜகந்நாத் இயக்கியுள்ளார். போக்கிரி மற்றும் பிசினஸ்மேன் போன்ற ஹிட் படங்கள் கொடுத்த பிளாக்பஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் பூரி ஜகந்நாத்.

இந்த படத்தில் ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1

பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படம் சர்வதேச குத்துச்சண்டை  விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படம் குத்துச்சண்டை கதைக்களத்தில் உருவானாலும் காதல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகும் இப்படத்தில் உலக புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நியூ கிலிம்ப்ஸ் வீடியோ டீஸர் வெளியாகி உள்ளது .அதில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி டீஸர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது . 

From Around the web