கே.ஜி.எஃப் 2 ரிலீஸுக்கு நாள்குறித்த படக்குழு- புதிய தேதி அறிவிப்பு..!

 
கே.ஜி.எஃப் சேப்டர் 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப்  இரண்டாம் பாகத்திற்கான புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட சினிமாவில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியான ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’ படம் மிகப்பெரியளவில் வரவேற்பை குவித்தது. கன்னட திரையுலகில் ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வரை வசூலித்த முதல் படம் என்கிற பெருமை இப்படத்துக்கு கிடைத்தது.

அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இடையில் கொரோனா முதல் அலையின் போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை வெளியிடாமல் போனது. அதை தொடர்ந்து கடந்த ஜூலை 15-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

அப்போது ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போனது. இதற்கிடையில் கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் வரும் 2022 ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் வெளியாகிறது. அதை தொடர்ந்து சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படம் வெளியாகிறது. அதை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர், புஷ்பா- 1, பீஸ்ட், வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் அடுத்தாண்டுக்கு கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 

From Around the web