இனி கோபி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவர்தான்..!!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து நடிகர் சதீஷ் விலகியதை அடுத்து, அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் பிரபலமான நடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிர்வாகம் முனைப்புக் காட்டி வருகிறது.
 
sathish

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இதற்கான பார்வையாளர்கள் வட்டம் மிகவும் பெரியது. சாதாரண சாமனியர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

இந்த தொடரில் கதாநாயகன் கோபி என்கிற கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். அவருடைய அப்பாவித்தனமான நடிப்பும், இரண்டு மனைவிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது அவர் காட்டும் முகம் பாவமும் பலரால் ரசிகப்படுகிறது. அவரது முந்தைய சீரியல்களை விடவும், இந்த பாக்கியலட்சுமி தொடர் சதீஷுக்கு சிறப்பான வரவேற்பை பெற்று தந்துள்ளது.

திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக பாக்கியலட்சுமி தொடரில் இருந்து சதீஷ் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள அவர்,  தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். நடிகர் சதீஷின் இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

prithveeraj

இந்நிலையில் தயாரிப்பு நிர்வாகம் சதீஷுக்கு பதிலாக வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகிறது. அதற்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ப்ரித்விராஜ். தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவரை பப்லு என்றும் சினிமா உலகில் குறிப்பிடுகின்றனர். 

இவரை தான் தயாரிப்பு நிர்வாகம் கோபியாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறது. அவர் மட்டுமின்றி விஜய் ஆதிராஜ், ’கோலங்கள்’ புகழ் ஆதி உள்ளிட்டோரு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு நடிகர் சதீஷ் கோபி கதாபாத்திரத்தில் 15 எபிசோடுகள் வரைக்கும் இருப்பார் என கூறப்படுகிறது. 

From Around the web