த.வெ.க கட்சியில் புது சட்டம்..! உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி..!

 
1

முன்னணி நடிகராக இருந்து சமீபத்தில் அரசியலிலும் இறங்கியுள்ளார் தளபதி விஜய் . இன்னும் இரண்டு படங்கள் மாத்திரம் நடித்துவிட்டு முழுமையாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று  திருப்பூர் முத்தன்னம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம்‌ பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் தோழர்கள்,தோழிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், “பணத்துக்காகவும் காசுக்காகவும் கூடுற கூட்டம் இல்ல, இது தளபதி விஜய்க்காக  சேர்ந்த கூட்டம். யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் பதவிகள் வழங்கப்படும்.போஸ்டர் ஒட்டி,  கொடி பிடித்து கட்சிக்காக உழைக்கும் ஒவ்வொரு அடிமட்ட தொண்டனும் தளபதியால் கவனிக்கப்படுவர். அவர்களை தளபதி கைவிடமாட்டார் .  சும்மா, வீரவசனம் பேசிவிட்டு மைக்கில் கைதட்டிவிட்டு போவது கிடையாது” என கூறியுள்ளார்.  

From Around the web