அஸ்வின், பவித்ரா லக்‌ஷ்மி நடித்துள்ள திகில் படத்திற்கு புதிய சிக்கல்..!!

 
அஸ்வின், பவித்ரா லக்‌ஷ்மி நடித்துள்ள திகில் படத்திற்கு புதிய சிக்கல்..!!

தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் பீட்சா. இதுதான் நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று தந்தது என்று கூட சொல்லலாம். ஹாலிவுட் சினிமா வரை பலரும் ரசித்த இந்த படத்தின் பெயரில் இரண்டாவது பாகம் வெளியானது.

ஆனால் அந்த படம் முதல் பாகம் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. எனினும், முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது பாகத்திற்கும் தொடர்ந்ததால், பீட்சா 2 ஹிட் படமாகவே அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாகத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் என்பவர் இயக்கி முடித்துள்ளார்.

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த அஸ்வின் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனுடைய முதல் பார்வை போஸ்டர் வெளியாகி சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக இந்த படம் மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் படத்தை வெளியிடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் தள்ளிப்போட்டது. ஆனால் கடந்த வாரம் தமிழக அரசு திரையரங்குகளை மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக பீட்சா 3 பட தயாரிப்பாளர் சி. வி. குமார் படத்தை ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதே சமயத்தில் இந்த படம் பீட்சா 2 படத்தின் தொடர் பாகமில்லை எனவ்ம், தலைப்பு மட்டுமே பீட்சா 3 என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் காளி வெங்கட், கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 

From Around the web