வெளியான புது ப்ரோமோ..! ரோகிணியிடம் வசமாக சிக்கிய மனோஜ்..! 

 
1

சற்றுமுன் வெளியான 'சிறகடிக்க ஆசை' சீரியல் ப்ரோமோவில், முத்து தனது நண்பன் செல்வத்திற்கு பிரிட்ஜ் வாங்க ஒரு கடைக்கு சென்ற நிலையில் அங்கு திடீரென போலீஸ் வருகிறது.  கடைக்காரர்களை மட்டுமின்றி முத்து மற்றும் செல்வத்தையும் போலீசார் அழைத்து சென்று சிறையில் அடைக்கின்றனர்.

அப்போது மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த போது இன்ஸ்பெக்டர் அவரிடம் ’உன் கடையிலிருந்து மீட்கப்பட்ட பொருள் வெளியே தான் இருக்கிறது என்று சொல்ல, அதில் என்னுடைய பொருள் எதுவுமில்லை என்று மனோஜ் சொல்கிறார்.



அப்போது தன்னுடைய கடையில் என்னென்ன பொருட்கள் பறி போனது என்று கூறியதோடு அந்த நான்கு லட்சம் எப்படி வந்தது? அதில் மூன்று லட்ச ரூபாயை கணக்கு காட்டிவிட்டு என் மனைவியிடம் ஒரு லட்ச ரூபாய் லாபம் வந்ததாக பொய் சொன்னேன்’ என்று கூறுகிறார். அதே போலீஸ் ஸ்டேஷனில் சிறையில் இருக்கும் முத்து இதனை வீடியோ எடுத்து வீட்டிற்கு வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு காட்டி ரோகிணி இடம் வசமாக கேள்வி கேட்கிறார்.

இதனை அடுத்து ரோகிணி ஒரு கோபப்பார்வை உடன் மனோஜை பார்ப்பதும், விஜயா அதை பார்த்து அதிர்ச்சி அடையும் காட்சிகள் ப்ரோமோ வீடியோவில் உள்ளன.

மொத்தத்தில் நான்கு லட்சம் ரூபாய் எப்படி வந்தது என்பது மட்டும் தான் தெரிந்ததே தவிர, கவரிங் நகை விஷயம் இதுவரை தெரியவில்லை. எனினும் இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

From Around the web