ஊரடங்கு காலத்தில் ஒளிப்பரப்பாகும் புதிய சீரியல்..!
 

 
ஜோதி சீரியல்

பெரும்பாலான சீரியல் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், சன் டிவியில் இரவு 9.30-க்கு புதிய சீரியலின் ஒன்று ஒளிப்பரப்பாகவுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சினிமா மற்றும் சீரியலுக்கான படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் விரைவில் நிறுத்தப்படவுள்ளன.

ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் எல்லா சேனல்களிலும் சில சீரியல்களின் பழைய எபிசோடுகள், மகா சங்கமம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

இந்நேரத்தில் சன் டிவியில் புதியதாக ஒரு சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது. வரும் மே 29-ம் தேதி முதல் ‘ஜோதி’ என்கிற சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது. இப்புதிய சீரியல் சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web