அட்லீ, ஷாருக்கான், நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்..!

 
அட்லீ மற்றும் ஷாரூக் கான்
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா நடிக்கும் படத்துக்கான ஷூட்டிங் எப்போது துவங்கும் என்கிற அப்டேட் வெளியாகியுள்ளது.

மெர்சல் படம் வெளியான போது நடிகர் ஷாரூக்கான் மற்றும் அட்லீ சந்திப்பு நடைபெற்றது. அப்போது இருவரும் படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவு செய்தனர். அதை தொடர்ந்து அட்லீ விஜய்யின் பிகில் படத்தை இயக்கி முடித்தார்.

அந்த படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு ஷாரூக்கானின் கவனத்தை ஈர்த்தது. இதன்மூலம் அட்லீயுடன் இயக்கத்தில் நடிப்பது என்கிற முடிவு எடுத்தார். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

தற்போது படத்தின் கதை ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக சானியா மல்ஹோத்ரா நடிக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தோஹா, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வெறும் 6 மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தக்கட்ட பணிகளை கவனிக்க இயக்குநர் அட்லி முகாமிட்டுள்ளார். படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக கிடைத்துள்ள அண்மைத் தகவலின் படி, படத்துக்கு ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் துபாயில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அதை தொடர்ந்து புனேவில் சில காட்சிகள் படமாக்கப்படுகின்றன. விரைவி இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web