நயன்தாராவின் நெற்றிக்கண் படம் பற்றி புதிய அப்டேட்..!

 
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அவருடைய காதலியும் நடிகையுமான நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. அதுவும் ஓ.டி.டி-யில் தான் வெளியானது. அதை தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த ‘நிழல்’ படம் வெளியானது. எனினும் அது திரையரங்கில் ரிலீஸான சில நாட்களில் கொரோனா ஊரடங்கு விதிகள் அமலுக்கு வந்ததால், தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டன.

தற்போது நயன்தாரா ‘அண்னாத்த’ ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில்  உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற பாடலின் சிங்கிள் டிராக் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.

கொரியன் மொழியில் வெளியான ’பிளைண்டு’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் ‘நெற்றிக்கண்’. இதை நயன்தாராவின் காதலர் விக்னெஷ் சிவன் தயாரித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார். சித்தார்த் நடிப்பில் வெளியான் ‘அவள்’ படத்தை இயக்கி மிலந்த் ராவ் ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கியுள்ளார். 

From Around the web